Asianet News TamilAsianet News Tamil

நேரம் மாறியது ..! அடுத்த 24 மணி நேரத்தில்... காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நீங்க செய்ய வேண்டியது.!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏற்கனவே மக்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரக் கூடிய இந்த ஒரு தருணத்தில், கோடை வெயில் தாக்கமும் அதிகரித்து உள்ளது 

people should not go out from 11.30 to 3.30 pm today
Author
Chennai, First Published Apr 23, 2020, 2:04 PM IST

நேரம் மாறியது ..! அடுத்த 24 மணி நேரத்தில்... காலை 11.30 மணி முதல் மாலை 3.30  மணி வரை நீங்க செய்ய வேண்டியது.! 

வெப்பசலனம் காரணமாக அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தேனி, மதுரை, விருதுநகர்,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பு  உள்ளது என்றும் என்றும் கரூர் வேலூர் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி முதல் 40 டிகிரி வரை பதியக் கூடும் என்றும் வானிலை தெரிவித்து உள்ளது

people should not go out from 11.30 to 3.30 pm today
 
அதிக வெப்பம்

அதேவேளையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் முதியவர்கள் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் அதிலும் குறிப்பாக வயதானவர்கள் குழந்தைகள் வெளியே வரவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏற்கனவே மக்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரக் கூடிய இந்த ஒரு தருணத்தில், கோடை வெயில் தாக்கமும் அதிகரித்து உள்ளது 

people should not go out from 11.30 to 3.30 pm today

சென்னையை பொருத்தவரையில் காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும், மாலை நேரத்தில் தெளிவாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 102 டிகிரி பாரான்ஹூட் வெப்பநிலை நிலவி வருகிறது. 

கடந்த ஒரு வார காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக வெப்ப நிலை நிலவி வந்தது. மேலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று நேரம் மாற்றி,11.30 மணி முதல் 3.30 மணி வரை வெளியே செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒரு நிலையில் அடுத்து வரும் சில நாட்கள் மற்றும் மே மாதத்தில் 104 டிகிரி பாரன்ஹூட் வரை வெப்பநிலை நிலவும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது 

Follow Us:
Download App:
  • android
  • ios