அந்த "தவறை" மட்டும் செய்யாதீங்க மக்களே..! பிரதமரே... அறிவித்த அதிமுக்கிய விஷயம்..!

கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவுவதை அடுத்து தற்போது நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடே தொடர் ஊரடங்கு அறிவித்து உள்ளார் பிரதமர் மோடி 

தற்போது கொரோனா  பாதிப்பால் 500க்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தருணத்தில் பலி எண்ணிக்கையும் 10 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்க அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது மத்திய அரசு.

தமிழகத்தை பொறுத்த வரையில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு தெரிவித்து உள்ளார். அதன் படி,

கொரோனாவை வீட்டிற்குள் கொண்டு வந்துவிட வேண்டாம்,கொரோனா பாதிப்பு குறித்து மிக எளிதாக  எடுத்துக்கொண்டு நடமாடி வந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளால் 21 ஆண்டுகள் இந்தியா பின்னுக்கு தள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும் என்பதை யாரும் மறவ கூடாது.

சீனா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவும் போது மக்கள் இது குறித்து மிகவும் சாதாரணமாக  எடுத்துக்கொண்டதால் தான் இன்று பெரிய இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய மக்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே மிக எளிதாக எடுத்திகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால்.... பெரும் தவறு நடக்கும். எனவே இந்திய மக்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க... 

 

ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டால் அடுத்த ஒரு வாரத்திற்குள் 100கும் அதிகமானோருக்கு பரவி பேராபத்தை ஏற்படுத்தி விடும். எனவே அனைவரும் வீட்டிற்குள் இருந்து தங்கள் குடும்பம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் குடும்பத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் இருங்கள் என தெரிவித்து உள்ளார்