ஷாக்கான மக்கள்..! வானத்தில்  திடீரென தோன்றிய "கருப்பு வளையம்"..? அதிர்ச்சி வீடியோ உள்ளே..!

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வானத்தில் திடீரென தோன்றிய கருப்பு நிற வளையத்தால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

பாகிஸ்தான் லாகூரில் வானத்தில் திடீரென கருப்பு நிற வளையம் தோன்றி உள்ளது. இதனை மக்கள் பார்த்தவுடன் பேரதிர்ச்சி அடைந்து ஆச்சரியமாக பார்த்து உள்ளனர். அந்த வளையம் என்னவென்றே தெரியாமல் பரபரப்பாக பேசி வந்தனர். 

மேலும் எதற்காக இந்த வளையம் தோன்றி உள்ளது என்றும் பேராபத்து வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் விளைவா என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் ஏலியன்ஸ் பயணிக்கக்கூடிய ஒருவிதமான வாகனமோ என்கூட தொடர்ந்து கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.

 

இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கும்போது, ஒரு விதமான புகை காரணமாக கூட திடீரென இதுபோன்ற கருப்பு வளையங்கள் ஏற்படுவது அரிதான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பா தொழிற்சாலையிலிருந்து வெளியேறக்கூடிய அதிகப்படியான புகையின் காரணமாக கூட திடீரென இது போன்ற வளையம் தோன்றலாம் என விளக்கம் அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும் இதேபோன்று பாகிஸ்தானின் ஒரு சில இடங்களிலும் காஷ்மீர் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இது போன்ற கருப்பு வளையம் தோன்றியுள்ளது என இதனைப் பார்த்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.