கேரளாவில் உருவான `சும்மா' ரெஸ்டாரன்ட்...!

கேரளாவில் உள்ள ஒரு உணவகம் மக்கள் மத்தியல் அமோக வரவேற்பை பெற்று  உள்ளது.

அதன்படி,எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்க..கையில் இருக்கிறத மட்டும் கொடுங்க என்பது தான் அந்த வாசகம்...

பீப்பிள்'ஸ் ரெஸ்டாரன்ட்

பீப்புள்'ஸ் ரெஸ்டாரன்டின் முதல் கிளை, ஆலப்புழையில் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கே, விதவிதமாக உணவு வகைகள் கிடைக்கும். சோறு, சாம்பார், காய்கறிக் கூட்டுகள், அப்பளம், ரசம், மோர், தயிர் எனத் தட்டு நிறைய வைக்கிறார்கள். 

ரெஸ்டாரன்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட இரண்டரை ஏக்கர் நிலமும் உள்ளது.

முற்றிலும் இயற்கையான முறையில் கீரை வகைகள், காய்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன. சாப்பிட வருபவர்கள் இந்தக் காய்கறிப் பண்ணையையும் பார்வையிடலாம்.

கடந்த மார்ச் 5-ம் தேதி, இந்த ரெஸ்டாரன்டின் தொடக்க விழாவும் நடந்தது.

தினமும் 2,000 பேருக்கு இங்கே உணவு தயாரிக்கிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாகவும், வயிறார உணவு அளிப்பதாகவும் உள்ளதால்,மக்கள் அதிக  ஆர்வமுடன் வந்து உண்டு செல்கின்றனர்.

மேலும், எவ்வளவு உண்டாலும் நம் கையில் இருக்கும் பணத்தை அல்லது நம்மால் முடிந்த பணத்தை அங்குள்ளபணப்பெட்டியில் இட்டு செல்ல வேண்டும்.

ஒரு வித்தியாசமான முறையில் மக்களுக்கு உதவி செய்யும் இது போன்ற உணவகங்களை மற்ற மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை  வைத்து உள்ளனர்.