ஆஸ்துமா, வீசிங் இருக்கா? அப்ப மழைக்காலத்தில் தெரியாமல் கூட இதெல்லாம் சாப்பிடாதீங்க!

Asthma Monsoon Foods : இந்த கட்டுரையில் ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மழைக்காலங்களில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த  உணவுகளை சாப்பிட கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

people of wheezing and asthma problems should not eat these foods during rainy season in tamil mks

பருவமழை வருவது மக்களை மகிழ்ச்சியடைச் செய்யும். ஆனால் சில நோயாளிகளுக்கு இது தொந்தரவாக இருக்கும். அதாவது, பருவமழை ஆஸ்துமா மற்றும் வீசிங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

மழைக்காலங்களில், சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பதம் மற்றும் ஈரமான உடைகள், காலணிகள் ஆகியவை சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு சரியான இனப்பெருக்கமாகும். இவை  ஆஸ்துமா மற்றும் வீசின் நோயாளிகளுக்கு ஆபத்தானவை. அதிலும் குறிப்பாக, மழை மற்றும் குளிர்காலங்களில் ஆஸ்துமா மற்றும் வீசிங் அதிகமாகவே இருக்கும். கர்ப்பிணிகளும், தாய்மார்களின் கூட இதனால் அவதிப்படுவார்கள். 

ஆனால், சிறந்த உணவு முறையின் உதவியுடன் ஆஸ்துமா மற்றும் வீசும் நோயாளிகள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எனவே, இந்த கட்டுரையில் ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மழைக்காலங்களில் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த  உணவுகளை சாப்பிட கூடாது? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Asthma Patients in AC : ஆஸ்துமா நோயாளிகளே! இந்த விஷயம் தெரியாம ஏசியில இருக்காதீங்க.! இல்லையெனில் ஆபத்து..

மழைக்காலங்களில் ஆஸ்துமா உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்:
நீர் காய்கறிகள், தர்பூசணி, கூல் ட்ரிங்ஸ், பேக் செய்யப்பட்ட பழசாறுகள், மில்க் ஸ்வீட்ஸ், சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பண்டங்கள் மற்றும் டார்க் சாக்லேட்கள் என இவை அனைத்தையும் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

அதுபோல, கொண்டைக்கடலை, புளி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உருளைக்கிழங்கு, கொத்தவரங்காய், காராமணி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றையும், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவு உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் வாயுவை உண்டாக்கும். எனவே, மூட்டு வலி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை உள்ளவர்களும், ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனைகள் அவதிப்படுபவர்களும் மழைக்காலங்களில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

ஆஸ்துமா வீசும் இருப்பவர்களுக்கு பெஸ்ட் டயட்:
சிவப்பரிசி, அவல், உப்புமா, கஞ்சி, முருங்கைக்கீரை, சாம்பார், மிளகு ரசம், துவையல், திப்பிலி ரசம், தூதுவளை ரசம் ஆகியவற்றை சாப்பிடலாம். அதுபோல வீசிங் பிரச்சினையால் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அவதிப்பட்டால் அவர்களுக்கு கரிசலாங்கண்ணி, துளசி, கற்பூரவள்ளி ஆகியவற்றை சேர்த்து, அதில் கருப்பட்டி அல்லது தேன் கலந்து கஷாயமாக குடிக்கக் கொடுக்கலாம்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் ஆஸ்துமா அதிகரிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!

மழைக்காலங்களில் ஆஸ்துமா வீசிங் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
சுக்கு காபி, மிளகு, துளசி, கற்பூரவள்ளி, திப்பிலி, தூதுவளை, இஞ்சி, பூண்டு, சோளம், நெல்லிக்காய் சமைத்த காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில், இவை அனைத்திலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தவிர பிற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கும். இவை தவிர, மருத்துவர்கள் உங்களுக்கு பரிந்துரைத்த உணவுகளையும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios