தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2..! ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..! 

நெல்லையில் ஒரு ஹோட்டலில் தயிர் பார்சல் கட்டணமும், ஜிஎஸ்டி வரியை வசூலித்த காரணத்தால்15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் தாராபுரத்தை சேர்ந்தவர் மகாராஜா என்ற 24 வயது மதிக்கத்தக்க இளைஞர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தயிர் வாங்கி உள்ளார். இதற்கு ரூபாய் 40 வசூல் செய்து உள்ளார் கடைக்காரர்.

அதில் தயிர் பார்சலுக்கு ரூ.2, ஜிஎஸ்டி ரூ.2 என சேர்த்து 44 ரூபாய் பெற்று உள்ளனர். பின்னர் தயிருக்கு ஜிஎஸ்டி வரியா? பார்சலுக்கு 2 ரூபாயா என கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் மாநில வரி உதவி ஆணையாளர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். பின்னர் இது குறித்த விசாரணை முடிவுற்ற நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக ரூபாய் 10 ஆயிரமும் வழக்கு செலவிற்கு 5 ஆயிரம் ரூபாயும் தயிருக்கு கூடுதலாக வசூலித்த ரூபாய் நான்கும் எதிர்மனுதாரர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.