மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டுக்கொண்ட நோயாளி...! நடந்த பரபரப்பு சம்பவம் என்ன..? 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோரிபாளையம் என்ற பகுதியில் ஈஸ்வரன் தெருவில் வசித்து வருபவர் 59 வயதான வெங்கடேசன் என்ற நபர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பின்னர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தபோதிலும் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே உள்நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் மூச்சுத்திணறல் தொடர்ந்து இருந்து உள்ளது.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில் வலி  வேதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓர் கட்டிடத்திற்குள் உள்ளே நுழைந்து நேற்று முன்தினம் இரவு தான் கட்டியிருந்த லுங்கியை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது பற்றி தெரிய வந்த பின்பு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் இதற்காக ஏன் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.