குழந்தை உங்க கிட்ட நேர்மையா இருக்கனுமா? இந்த '5' தப்ப மட்டும் பண்ணாதீங்க!

Parenting Tips : உங்கள் குழந்தை உங்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சில தவறுகளை செய்வது நீங்கள் தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

parents should avoid these mistakes for honest children in tamil mks

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எதிர்காலத்தில் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அவர்களுக்கு சிறு வயது முதலே கல்வியுடன் பல விஷயங்களையும் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த லிஸ்டில் குழந்தைகளுக்கு நேர்மை கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமை. ஆனால், நேர்மை என்பது எல்லோருக்கும் உடனடியாக வரும் ஒரு குணம் அல்ல. இத்தகைய சூழ்நிலையில், பெற்றோரிடம் குழந்தைகள் நேர்மையாக இருக்க பெற்றோர்கள் சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அது என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

குழந்தைகள் நேர்மையாக இருக்க பெற்றோர்கள் செய்யக்கூடாத தவறுகள்:

1. குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தாதே..

குழந்தைகள் பெற்றோருக்கு பயப்பட வேண்டும். அது தவறில்லை. இல்லையெனில், அவர்கள் தவறான பாதையில் செல்ல நேரிடும். ஆனால் அதிகப்படியான பயமானது மோசமான விளைவை ஏற்படுத்தும் தெரியுமா? ஆம், குழந்தைககுக்கு உங்கள் மீது பயம் அதிகமாக இருந்தால் அவர் உங்களிடம் அதிகம் பொய் சொல்லலாம். எனவே, குழந்தைகளை எதற்கெடுத்தாலும் பயம்புறுத்தி வைப்பது தவிர்க்கவும். மேலும், அவர்கள் ஏதாவது தவறு செய்தால் அதை வெளிப்படையாக செல்லும்படி அவர்களிடம் அன்பாக பேசுங்கள். அவர்கள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இப்படி நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் நடந்து கொண்டால் உங்கள் குழந்தையின் உங்களிடம் நேர்மையாக இருக்கும்.

2. குழந்தையின் தனியுரிமைக்கு மதிப்பு கொடு..

குழந்தைகளுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் தனி உரிமை உள்ளன. அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி நீங்கள் அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்த வேண்டாம் மற்றும் அவர்களை உளவு பார்க்கவும் வேண்டாம். அவர்கள் விரும்பியதை செய்ய முழு சுதந்திரம் அவர்களுக்கு கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

இதையும் படிங்க:  உங்களிடம் இந்த '5' குணங்கள் இருந்தா நீங்க தான் பெஸ்ட் 'அம்மா'

3. குழந்தையிடம் நேர்மையற்றவராக இருக்காதீங்க..

பொதுவாகவே குழந்தைகள் தங்கள் பெற்றோரை பார்த்து தான் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நேர்மையற்றவராக இருந்தால் உங்கள் குழந்தையும் உங்களை பார்த்து நேர்மையற்றவராக வளருவார்கள். எனவே உங்கள் குழந்தை உங்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பினால் முதலில் நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாக இருங்கள்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய '5' பழக்கங்கள்!!

4. குழந்தையின் உணர்வுகளை மதி..

நீங்கள் உங்கள் குழந்தைகளின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றால், அவர்கள் தங்களது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குவார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நீங்கள் சாக்கோ போக சொன்னாலும் அவர்கள் உங்களிடம் எதையுமே பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் உங்களுடன் நேர்மையாகவும் நடந்து கொள்ள மாட்டார்கள்.

5. எதிர்பார்ப்புகளை திணிக்காதே..

நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தை குழந்தைகளால் சாதிக்க முடியவில்லை என்றால் அதை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். ஏனெனில் பெற்றோரின் எதிர்பார்ப்பை தங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். எனவே அவர்கள் செய்யும்  விஷயங்களை மட்டுமே பாராட்டுங்கள். அவர்கள் தோற்கும் போது பரவாயில்லை என்று அவர்களது முதுகில் தட்டிக் கொடுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் மீது உங்கள் குழந்தைக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இதனால் அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios