உங்களிடம் இந்த '5' குணங்கள் இருந்தா நீங்க தான் பெஸ்ட் 'அம்மா'

Parenting Tips : நல்ல தாய்க்கு தேவையான ஐந்து குணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

5 good qualities for mom in tamil mks

ஒரு பெண் நல்ல தாயாக இருப்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதில் முக்கிய காரணியாக விளங்கும். நல்ல தாயாக இருப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமையும் கூட.  ஒரு குழந்தையின் மனநலம் நன்றாக இருக்க தாய், தந்தை இருவரும் சரியானவர்களாக இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த பதிவு ஒரு தாய்க்கான குணங்களைப் பற்றி மட்டும் விளக்குகிறது. இவை உண்மையில் தந்தைக்கான கடமைகளும் தான். நீங்கள் சரியான தாயாக இருக்க வேண்டும் என்றால் உங்களிடம் சில குணங்கள் இருப்பது அவசியமாகிறது.  அந்த ஐந்து குணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பொறுமைசாலி: 

பெற்றோர் பொறுமையாக இருப்பது அவசியம். அதிலும் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் தாய் பொறுமையாக இருப்பது குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையானது. குழந்தைகளுக்கு அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்களுடைய கேள்விகளுக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லவும் தாய்க்கு பொறுமை ரொம்ப அவசியம். அதிலும் குழந்தைகள் எப்போதும் பிடிவாதமாக இருப்பார்கள். சொன்ன சொல்லை கேட்பது அவர்களுடைய அகராதியிலேயே கிடையாது. இது மாதிரியான சமயங்களில் தாய் பொறுமையாக இருப்பது முக்கியமான குணமாக கருதப்படுகிறது. 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய '5' பழக்கங்கள்!!

அன்பும் பரிவும்: 

குழந்தைக்கு அடிப்படையான தேவையே அன்பும், கனிவும்தான்.  குழந்தைகளுடைய மகிழ்ச்சியான மன நிலைக்கு இந்த இரண்டு பண்புகளும் ஒரு தாயிடம் இருப்பது அவசியமாகும். இதுவே அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. ஒரு நல்ல தாய் என்பவள் அன்புடனும் பரிவுடன் குழந்தையை பேணி காப்பாள். 

ஞானம்: 

குழந்தைகளுடைய தேவைகளை அவர்களுடைய அசைவுகளை வைத்தே புரிந்து கொள்ளக்கூடிய ஞானம் தாயிடம் இருக்க வேண்டும். இந்த ஞானத்தை பெற ஒவ்வொரு தாயும் குழந்தைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்.  அவர்களுடைய பிரச்சனைகளை புரிந்து அதனை தீர்த்து வைப்பது தாயின் பொறுப்பு. 

இதையும் படிங்க:  உங்க குழந்தைக்கு படிப்பு மேல ஆர்வம் வரனுமா? சூப்பரான '5' டிப்ஸ்!

நேர்மறையாக சிந்தியுங்கள்: 

நேர்மறையான சிந்தனைகளைக் கொண்டுள்ள தாய் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறார். ஒவ்வொரு தாயும் நேர்மறை சிந்தனை கொண்டவராக இருப்பது அவசியம். குழந்தைகளிடம் நேர்மறையான சிந்தனையை வளர்ப்பதற்கு இது அடிப்படையாக அமையும்.  எவ்வளவு மோசமான சூழ்நிலைகளிலும் தைரியம் இழக்காமல் போராடும் குணத்தை தாயிடமிருந்து குழந்தைகள் பெறுவார்கள். 
 
ஒப்பு கொடுத்தல்: 

குழந்தைக்காக தன்னை அர்ப்பணிக்க தாய் தயாராக இருப்பது முக்கியம். குழந்தையின் தேவையை நிறைவேற்ற தங்களுடைய 100% சதவீத உழைப்பையும் கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.  குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியளிப்பது பெற்றோரின் கடமை என்பதை மறக்கக்கூடாது. நல்ல தாயால் மட்டுமே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios