பிறந்த இரட்டை குழந்தைக்கு "கொரோனா-கோவிட்" பெயரிட்ட பெற்றோர் ..!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் அனைவருக்கும் ஒரு விதமான பயம் தொற்றி உள்ளது. இது  வரை பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை உள்ளது .

மேலும் தொடர்ந்து பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு அந்தந்த நாடுகள் ஊரடங்கு  உத்தரவை பிறப்பித்து உள்ளன. முன்னதாக 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகெங்கும் இது போன்று  தோற்று நோய் ஏற்பட்டதற்கான ஆதாரம் உள்ளது என ஒரு சில புகைப்படங்களை பார்க்க முடிந்தது.இந்த ஒரு நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில பெற்றோர் அவர்களது குழந்தைகளுக்கு கொரோனா என்ற பெயரை வைகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’என்று பெயரிட்டு உள்ளனர் பெற்றோர்கள்

கொரோனா என்றாலே பெரும் பயத்தை ஏற்படுத்தும் பெயராக உள்ளது. இந்த ஒரு தருணத்தில் குழந்தைகளுக்கு தைரியமாக கொரோனா என பெயரிடுவதை பார்க்கும் போது, கொரோனாவை வெல்வதன்  நினைவாக என ஒரு அடையாளமாக இருக்கும் என கருத முடிகிறது.

குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தெரிவிக்கும் போது

27 மார்ச் ஆம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது. அதில் ஒரு ஆண் குழந்தை- ஒரு பெண்  ழந்தை  பெண்  குழந்தைக்கு கொரோனா என்றும், ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும் பெயரிட்டு உள்ளோம். பல  கஷ்டங்களை தாண்டி எனக்கு அன்று பிரசவம் நடந்தது. அதனால் தான் இப்படி பெயரிட்டு உள்ளோம் என அவர்  தெரிவித்து உள்ளார்.