உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சிறந்த பெற்றோராவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்..
ஒரு சிறந்த பெற்றோராக மாறுவதற்கு பெற்றோரின் தரப்பில் நிறைய தியாகங்களும் சமரசங்களும் தேவை. அவர்கள் தங்கள் குழந்தைகளின் முகத்தில் ஒரு புன்னகையைப் பார்ப்பதற்காக, தங்கள் குழந்தைகளுக்காக வாழ்க்கையில் தங்கள் ஒவ்வொரு சிறிய மகிழ்ச்சியையும் ஆசைகளையும் தியாகம் செய்கிறார்கள். உங்களுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர, உங்கள் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் முதலில் உங்களை நம்ப வேண்டும், அப்போதுதான் அவர்கள் உங்களுடன் முக்கிய ரகசியங்களை பகிர்ந்து கொள்வார்கள். சிறந்த பெற்றோராக மாறுவது மற்றும் உங்கள் குழந்தைகளின் நம்பிக்கையை எவ்வாறு பெறுவது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்..
நீங்கள் சிறந்த பெற்றோராகத் திகழ்வதற்கு 6 அருமையான யோசனைகள் இங்கே..
குழந்தைகள் விரும்பும் படி இருங்கள்: உங்கள் குழந்தை உங்களை விரும்பும் படி, உங்களுடைய பேச்சு, செயல், உட்காரும் விதம் மற்றும் நிற்கும் விதம் என எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறீர்களா? என்று உங்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். மேலும் நீங்கள் அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுங்கள்.
சரியான சூழ்நிலையை உருவாக்குங்கள்: நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஏற்ற அன்பான, ஆதரவான, மற்றும் உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுங்கள். இதற்கு அவர்களுக்கு ஏதும் கற்பிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் நீங்கள் ஒருபோதும் பின்பற்ற முடியாத சில விஷயங்களை அவர்களுக்குக் கற்பிக்காதீர்கள்.
இதையும் படிங்க: அன்புள்ள பெற்றோர்களே! நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோரா? செக் பண்ணுங்க..
பொம்மைகள் கொடுப்பதைத் தவிர்க்கவும்: உங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்கவும். அவற்றைக் கொண்டு எந்த பயனுமில்லை. மேலும் இதனால் அவர்கள் மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். எனவே, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லுங்கள், நீச்சல் கற்று கொடுங்கள், மரத்தில் ஏற வைத்து விளையாடுங்கள் இப்படி இதுபோன்றவற்றைச் செய்தால், அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வளருவார்கள்.
இதையும் படிங்க: ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் குழந்தை... இந்த பழக்கத்தை மாற்ற சுலபமான தீர்வு இதோ!
ஒரு நல்ல திட்டம் தீட்டுங்கள்: குழந்தையை வளர்ப்பது என்பது அடுத்த தலைமுறையை உருவாக்குவதாகும். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க நீங்கள் அதற்கு ஒருபடி மேலே உழைக்க வேண்டும். இன்னும் சொல்லபோனால், உங்கள் குழந்தை சிறப்பாக வளர்வதற்காக நீங்கள் அவர்களுக்காக இருபது ஆண்டுத் திட்டம் தீட்டுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இயற்கையோடு இணைந்திருங்கள்: உங்கள் குழந்தை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாகவும், சமநிலையுடனும் இருக்க வேண்டுமென்றால், அவர்களை இயந்திர உலகில் இருந்து விலக்கி வையுங்கள். மேலும் இயற்கை சூழ்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
உணர்ச்சி பாதுகாப்பை வழங்கவும்: இன்றைய காலத்தில், உணர்ச்சிவசப்படுவது என்பது எதிர்மறையாகிவிட்டது. ஆதாவது ஒருவர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாரானால் அவர் பைத்தியம் என்று சொல்லும் காலம் இது. எனவே குழந்தைகளிடம் மகிழ்ச்சி, பேரின்பம், அன்பு, பக்தி, பரவசம் ஆகிய நேர்மறை உணர்ச்சிகளைக் கையாளுங்கள்.
