அன்புள்ள பெற்றோர்களே! நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோரா? செக் பண்ணுங்க..

நீங்கள் உங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை இங்கே சோதித்துப் பாருங்கள்..

parenting tips what are the qualities of a good parents in tamil mks

சில பல விஷயங்களால் ஒருவர் தன் குழந்தைக்கு நல்ல பெற்றோரா? இல்லையா? என்று தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாகவே, குழந்தைகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பது, குழந்தைகளிடம் வன்முறையாக நடந்து கொள்வது இவை அனைத்துமே தவறான பெற்றோருக்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

குழந்தையிடம் குறைவான ஈடுபாடுடன் இருப்பது: சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் குறைவான ஈடுபாடுடன்  இருப்பதால், குழந்தையின் தேவை முழுமையாக பூர்த்தி அடைவதில்லை. இன்னும் சில பெற்றோர்களோ அதிகப்படியான ஈடுபாடுடன் இருப்பார்கள். ஆனால் இதுவும் தவறு. இதில் நீங்கள் எந்த வகை..

குழந்தைகளுக்கு தண்டனை கொடுப்பது: நீங்கள் உங்கள் குழந்தை செய்யும் தவறுக்கு அவர்களை தண்டிப்பது மிகவும் தவறு. இதனால் அவர்கள், மற்றவர்கள் குறித்த எந்த சிந்தனையுமின்றி வளர வாய்ப்பு அதிகம்.

மரியாதை கொடுக்க தெரியாத குழந்தை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மோசமாக நடந்து கொண்டால் அக்குழந்தை மரியாத கொடுக்க தெரியாத குழந்தையாக வளர்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் அமைதியான சூழலை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் அவசியம். இது அவர்களின் கடமை என்று கூட சொல்லலாம்.

அன்பு அவசியம்: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையிடம் அன்பு காட்ட வேண்டியது மிகவும் அவசியம். ஒருவேளை நீங்கள் போதிய அன்பு அவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால், அது அவர்களை மனதளவில் பாதிக்கும். அன்புக்காக ஏங்குவார்கள்.

இதையும் படிங்க:  ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் குழந்தை... இந்த பழக்கத்தை மாற்ற சுலபமான தீர்வு இதோ!

அனுதாபம் அவசியம்: இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனுதாபம் சொல்லிக்கொடுப்பதில்லை. இதனால் அவர்கள், மற்றவர்களின் வலிகள் மற்றும் உணர்வுகள் தங்களின் உணர்வாக எண்ணுவதில்லை. இதனால் அவர்கள் பொறுப்பற்றவர்களாக வளருகிறார்கள்.

இதையும் படிங்க:  பெற்றோர்களின் கவனத்திற்கு! உங்கள் குழந்தையை அதிக ஒழுக்கத்துடன் வளர்த்தால் இதுதான் நடக்கும் தெரிஞ்சிக்கோங்க!!

பெற்றோர்களின் கணிக்கமுடியாத நடத்தை: சில பெற்றோர்களின் நடத்தை குழந்தைகள் மத்தியில் கணிக்க முடியாத வகையில் இருக்கும். இது அவர்களுக்கு பேரழிவை உண்டாக்கும். இன்னும் சொல்லப் போனால், இந்த முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பின்றி மற்றும் பதற்றத்துடன் வளர்வார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அன்பு மற்றும் அக்கறை அவசியம்: சில பெற்றோர்களின் அன்பு நிபந்தனைகள் நிறைந்தும், குழந்தைகள் சொல்வதை கேட்காமல் அவற்றை நிராகரிப்பது, இவை அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் நீங்கள் அவர்கள் மீது நீண்ட நாள் அக்கறை செலுத்தாமல் இருந்தால் அது அவர்களை இன்னும் மனதளவில் மோசமாக்கும். இதனால் அவர்கள் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் இருப்பது: பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் பொதுமான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். அதற்கென்று தனி நேரத்தை ஒதுக்குங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கு இடையே நல்ல பிணைப்பை உண்டாக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios