கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் சீதாராமன் அறிவித்து இருந்தார். 

அதன்படி 50,000 ரூபாயை தாண்டினால் ஆதார் கண்டிப்பாக தேவை...!

50 ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, பான் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு பதிலாக தற்போது ஆதார் இருந்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக பணபரிவர்த்தனை செய்தால் ஆதார் எண்ணே போதுமானது. இது தவிர மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்திகொள்ளலாம்.

பணம் எடுக்க மற்றும் செலுத்த..! 

50,000 ரூபாய்க்கு மேலாக பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் பான் எண் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது ஆதார் எண்ணெய் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி தாக்குதலுக்கு பான் எண் இல்லை என்றாலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி தாக்கல் செய்யலாம்.

பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யும் போது புதிய பான் எண்ணை உருவாக்கி ஆதார் எண்ணுடன் இணைத்து விடுவார்கள். எனவே  இனி பான் எண்ணை வைத்து மட்டும் செய்ய வேண்டிய பல வேலைகளை ஆதார் எண்ணை கொண்டே செய்து விடலாம்.