மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 1.5 கிலோ ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேற்குவங்கம் மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் உடல்நல கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு முறை மருத்துவ சோதனைகளுக்கு பின்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அப்பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல்கள், மூக்குத்திகள், கடிகாரங்கள், செயின்கள், மோதிரங்கள் உள்ளிட்ட 1.5 கிலோ ஆபரணங்கள் அகற்றப்பட்டன. மேலும் ரூ.5. ரூ.10 என 90 நாணயங்களும் அகற்றப்பட்டன. அவற்றில் செம்பு மற்றும் பித்தளையால் ஆன பொருட்களும், தங்கப்பொருட்களும் இருந்தன.

இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், ‘’ எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனது சகோதரரின் கடையிலிருந்து ஆபரணங்களை அப்பெண் எடுத்துள்ளார். கடையில் பொருட்களை காணாமல் போவது குறித்து அவரிடம் கேட்டால் உடனே அழத்தொடங்கி விடுவார். இதனைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மகளை மருத்துவமனையில் அனுமதித்தோம். இப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.