செய்கூலி சேதாரம் சேர்த்து சவரன் விலை 38 ஆயிரம்...! ஷாக்காகும் மக்கள்..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.109 உயர்ந்து 4231 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்கப்பட்டது 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 குறைந்து 4220.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 33 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து அதிகரித்து 50.400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.