அதிர்ச்சி தகவல்..! சவரன் விலை 36 ஆயிரம் வரை உயரப்போகுது..!  

2020 ஆம் ஆண்டு தங்கம் விலை மேலும் அதிகரிக்க கூடும் என தமிழகத்தின் தங்க நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அதன்படி உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை தற்போது குறைய வாய்ப்பே இல்லை என்றும்  தற்போது இருக்கும் விலையைவிட அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

தற்போது 30 ஆயிரம் ரூபாயாக இருக்கும் சவரன் விலை 36 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது என அதிரடி கருத்தை தெரிவித்து உள்ளார் தங்க நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஸ்ரீராம். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் தங்கம் மீதான விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொருளாதார நிலையை வைத்து பார்க்கும்போது 36 ஆயிரம் வரை உயர வாய்ப்பு உள்ளது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தங்கம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுவதால் மேலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு, வரும் 15ம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை மையங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் தங்க நகை வாங்குவது யாராலும் தடுக்க முடியாததாக இருக்கும். இந்த ஒரு தருணத்தில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க கூடும் என்ற செய்தி ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.