டாக்டர், நர்ஸ்களுக்கு ஒரு மாத சிறப்பு சம்பளம்..!  அதிரடி அறிவிப்பு..!

டாக்டர், நர்ஸ்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் பரவி வருவதால், பொதுமக்கள் இடையே தற்போது தான் மெல்ல மெல்ல அச்சம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எத்தனையோ நடவடிக்கை மேற்கொண்டும் , அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றித் திரிந்ததை காணமுடிந்தது.

இந்த ஒரு நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்ப தொடங்கியுள்ளனர். மேலும் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துக்காக காத்திருந்து செல்லக்கூடிய காட்சியை பார்க்க முடிந்தது.

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் அவரவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஒரு நிலையில் மதுரையில் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் நபர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்.. மட்டுமே தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படி ஒரு நிலையில் "தயவுகூர்ந்து நீங்கள் அனைவரும் வீட்டிற்குள் இருங்கள்.. உங்களுக்காக நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம்" என மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற தூய்மை மருத்துவ பணியாளர்களும் சேவையில் இருக்கின்றனர். இவர்களது சிறந்த சேவையை பாராட்டி, அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, நமக்காக மருத்துவமனையில் இரவும் பகலும் கண்விழித்து வேலை செய்யும் மருத்துவர்களும் செவிலியர்களும்,மருத்துவ உதவியாளர்களும் நமக்கு வாழும் கடவுளே... எனவே இவர்களுக்கு என்னதான் சிறப்பு சம்பளம் கொடுத்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் கை கொடுத்து ஒருவருக்கொருவர் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் உள்ளோம் என்ற உண்மையை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.