காண்போரை அச்சுறுத்தும் வகையில் மிகக் கொடூர உருவத்துடன் காட்சியளிக்கும் ராட்சத கழுகு ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பீதியை கிளப்பி வருகிறது.

அது  கழுகா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா, என்ற அச்சத்தையும்  ஏற்படுத்தும் வகையில் அதன் தோற்றம் மிகக் கொடூரமாக இருப்பதே அதற்கு காரணம்.  கழுகு என்றாலே  கூர்மையான  அதன் அலகும், ஈட்டி போன்ற நகங்களும் அச்சுறுத்தும் அதன்  உருவமும்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் கழுகில் பல வகைகள் உண்டு என்றாலும்  தற்போது கழுகு இனம்  90 சதவிகிதத்திற்கு மேல் அழிந்து இன்னும் சில வருடங்களில் அதன் இனமே இல்லாமல் போகும் ஆபத்து  ஏற்பட்டுள்ளது. புவியின் சுற்றுச்சூழலுக்கும், அதன் பல்லுயிர் பெருக்கத்திற்கும், உணவுச் சங்கிலிக்கும் மிகமுக்கியமான பறவையாக இருந்து  மனித  இனம் தழைக்க மிக முக்கிய காரணிகளில் ஒன்றான கழுகு இனம் அழிந்து வருவது பூமியின் அழிவிற்கான அறிகுறி என அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

 

மனித இனம் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகவே கழுகு இனத்தின் அழிவு கருதப்படுகிறது. இந் நிலையில் ராட்சத கழுகு ஒன்றின் புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் புகைப்படத்தை மரிசா என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், அவர் அந்த கழுகின் அருகில் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உலாவருகிறது.  அதில் உள்ள கழுகு இதுவரை நாம் யாரும் கண்டிராக முகத்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. அந்த கழுகின் கூர்மையான அலகும் அதன் விழிகள் மனிதனின் விழிகளை ஒத்ததாக உள்ளது. கிட்டத்தட்ட மனிதனை போலவே அதன் முகத்தோற்றும் உள்ளதால்  காண்போரை அது மிரளவைப்பதாக உள்ளது.