மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸின் "One Chai Please" வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை பற்றி தெரியாதவர்களே இல்லை. இவர் தனது instagram பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அது மக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
பிரபல நாக்பூர் தேனீர் விற்பனையாளர் டோலி சாய்வாலாவிடமிருந்து கேட்ஸ் ஒரு கப் டீ குடிப்பது தான் அந்த வீடியோ. அந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது முதலில் பில்கேட்ஸ் 'One Chai Please', என்று சொல்லுவதை நீங்கள் காணலாம். அதன் பிறகு டோலி கேட்ஸ்க்கு தனது தனித்துவமான பாணியில் டீயை தயாரித்து கொடுப்பதும், பில்கேட்ஸ் அதை ரசித்து குடிப்பதையும் வீடியோவில் உங்களால் காண முடியும். கடைசியாக டோலி பில்கேட்ஸ் உடன் வீடியோவிற்கு போஸ் கொடுப்பதையும் காணலாம்.
இதையும் படிங்க: Bill Gates : சாக்கடைக்குள் இறங்கிய பில் கேட்ஸ்.. உண்மையான வீடியோ தான்.. ஏன்? எதற்கு தெரியுமா?
இதையும் படிங்க: மனிதர்களின் பணிச்சுமையை குறைக்கும் செயற்கை நுண்ணறிவு: பில் கேட்ஸ்!
இந்த வீடியோ தற்போது மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது. மேலும் இது குறித்து, பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். "இந்தியாவில் நீங்கள் எங்கு திரும்பினாலும் ஒரு எளிய தேநீர் தயாரிப்பு கூட புதுமையை காணலாம்!" என்ற தலைப்பில் பில் கேட்ஸ் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
யார் அந்த டோலி சாய்வாலா?
டோலி சாய்வாலா, நாக்பூரில் சாலையோர டீ கடை வைத்துள்ளார். இவரது உண்மையான பெயர் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், "டோலி சாய்வாலா"வின் ஸ்டைலான டீ தயாரிப்பு பாணியில் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது. இதன் காரணமாகவே பல சமூக வலைத்தள பையனர்கள் அவரது வீடியோக்களை பார்த்து பகிர்வது உண்டு.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
