Asianet News TamilAsianet News Tamil

அப்ப கூலித் தொழிலாளி... இப்ப லட்சாதிபதி! ஐசக் முண்டாவின் வாழ்க்கையை மாற்றிய யூடியூப் சேனல்!

யூடியூப் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி அறிந்ததும், தனது ஐசக் முண்டா ஈட்டிங் (Isak Munda Eating) என்ற சேனலைத் தொடங்கினார். பலவிதமான பாரம்பரிய ஒடிசா உணவுகளை சாப்பிடுவது குறித்து தனது சேனலை மார்ச் 2020 இல் ஆரம்பித்தார்.

Once Earned Rs 250 Per Day: Odisha Labourer Now A YouTube Star Makes Lakhs A Month sgb
Author
First Published Feb 18, 2024, 12:44 PM IST

ஒடிசாவைச் சேர்ந்த ஐசக் முண்டா, முன்பு தினக்கூலித் தொழிலாளியாக இருந்தவர். தனது யூடியூப் சேனல் மூலம் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றவர் இப்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் தொடங்கியவுடன், ஐசக் வேலையில்லாமல் கஷட்ப்பட்டார். தனது குடும்பத்திற்கு அன்றாடத் தேவைக்கு வேண்டிய பணத்தைக் கூட சம்பாதிக்க வழியில்லாமல் இருந்தார். “நான் தினக்கூலியாக வேலை செய்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பாதித்தேன். ஆனால் கோவிட்-19 தொற்று பரவலால் அந்தப் பணம் கூட கிடைக்காமல் போனது" என்கிறார்.

அந்த சமயத்தில் யூடியூப் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி அறிந்ததும், தனது ஐசக் முண்டா ஈட்டிங் (Isak Munda Eating) என்ற சேனலைத் தொடங்கினார். பலவிதமான பாரம்பரிய ஒடிசா உணவுகளை சாப்பிடுவது குறித்து தனது சேனலை மார்ச் 2020 இல் ஆரம்பித்தார்.

"ஆரம்பத்தில், எனது வீடியோக்களை யாரும் பார்க்கவில்லை, ஆனால் மெதுவாக, மக்கள் எங்கள் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினர்" என்று சேனல் ஆரம்பித்த காலத்தை நினைவுகூர்கிறார்.

எல்லாருக்கும் மாதம்தோறும் ரூ.5000 கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாத வருவாய் திட்டம்!

Once Earned Rs 250 Per Day: Odisha Labourer Now A YouTube Star Makes Lakhs A Month sgb

ஒடிசாவில் மிகவும் விரும்பப்படும் சுவையான பாசி பகலாவை அவர் ருசிக்கும் வீடியோ ஒன்று வைரலானது. இதனால் அவருக்கு சுமார் 20,000 சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்தார்கள். இப்போது யூடியூப் பிரபலமாக மாறிவிட்ட ஐசக், ஆரம்பத்தில், "அமெரிக்கா, பிரேசில், மங்கோலியா போன்ற நாடுகளில் எனது வீடியோக்கள் பார்க்கப்படுவது எனக்கு ஒரு கனவு போல இருந்தது" என்கிறார்.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் ஐசக் முண்டாவைப் பாராட்டியுள்ளார்.

“இன்று, எனது வீடியோக்கள் சிறப்பாக செயல்படும்போது நான் சுமார் ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறேன். எனது வீடியோக்களை எடிட் செய்வதற்காக லேப்டாப் மற்றும் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கினேன். இன்று, கனவில்கூட நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையை எனது குடும்பத்திற்குக் கொடுத்திருக்கிறேன்” என்று திருப்தியுடன் சொல்கிறார் ஐசக் முண்டா.

போயிங் 737 விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றிய நபர்! அசந்து போன ஆனந்த் மஹிந்திரா!

Follow Us:
Download App:
  • android
  • ios