Asianet News TamilAsianet News Tamil

எல்லாருக்கும் மாதம்தோறும் ரூ.5000 கிடைக்கும்! போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாத வருவாய் திட்டம்!

தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் ரூ.5 லட்சம், ரூ.9 லட்சம் அல்லது ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வருமாய் ஈட்டலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Post Office Monthly Income Scheme: Earn Rs 5000 to Rs 9000 per month after retirement sgb
Author
First Published Feb 18, 2024, 11:40 AM IST

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில், எந்தவொரு நபரும் ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, டெபாசிட் தொகை முழுவதும் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டத்தில் எந்த இந்திய குடிமகனும் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் சிறப்பானது.

இந்தத் திட்டத்தில் ரூ.5 லட்சம், ரூ.9 லட்சம் அல்லது ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஏடிஎம் கார்டு மூலம் எல்லாருக்கும் இன்சூரன்ஸ் இருக்கு! ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை! முழு விவரம் இதோ...

ரூ.5 லட்சம், ரூ.9 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் டெபாசிட்களின் வருமானம் என்ன?

இத்திட்டத்தின் கீழ் போஸ்ட் ஆபிஸில் ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.5,550 வட்டி வரும்.

இரண்டு பேர் சேர்ந்து கூட்டுக் கணக்கில் முதலீடு செய்தால் ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம்.  அப்போது, வட்டி மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருவாய் கிடைக்கும்.

ஐந்து வருடங்களுக்கு முன் பணத்தை எடுக்க...

முதிர்வுக்கு முன் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஓராண்டுக்குப் பிறகுதான் இந்த வசதி உண்டு. அதற்கு முன் தொகையை எடுக்க விரும்பினால், அது சாத்தியமில்லை.

எப்போது எடுத்தாலும் முதிர்வு காலத்துக்கு முன் பணத்தை எடுத்தால் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2 சதவீதம் கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.

அதேசமயம், கணக்கைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், 5 ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் பணத்தை எடுக்க விரும்பினால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 1 சதவீதத்தைக் கழித்துவிட்டுக் கொடுப்பார்கள்.

5 ஆண்டுகள் முதிர்வு காலத்தை முழுமையாக முடித்த பிறகு, முழுத் தொகையையும் வட்டியுடன் திரும்பப் பெறலாம்.

போயிங் 737 விமானத்தை சொகுசு பங்களாவாக மாற்றிய நபர்! அசந்து போன ஆனந்த் மஹிந்திரா!

Follow Us:
Download App:
  • android
  • ios