ஏடிஎம் கார்டு மூலம் எல்லாருக்கும் இன்சூரன்ஸ் இருக்கு! ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை! முழு விவரம் இதோ...
ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விபத்து காப்பீடு வழங்கி வருகின்றன. அதன் மூலம் பொதுத்துறை வங்கியாக இருந்தாலும் தனியார் வங்கியாக இருந்தாலும் இந்த காப்பீடு கிடைக்கும்.
SBI
ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வகையில் ஏடிஎம் கார்டு அடிப்படையில் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. விமான விபத்தில் ஏற்படும் இறப்புக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்.
HDFC
எச்டிஎப்சி டெபிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குகிறது. சர்வதேச விமானப் பயணத்தின்போது மரணம் அடைந்திருந்தால், ரூ.1 கோடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ICICI
ஐசிஐசிஐ வங்கி கோல்டு டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு கொடுக்கிறது. விமான விபத்தில் ஏற்படும் மரணத்துக்கு ரூ.30 லட்சம் வரை வழங்குகிறது. கோல்டு டெபிட் கார்டு இல்லாத மற்ற கார்டுகளுக்கு விமான விபத்துக்கான காப்பீடு மட்டும் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.
Kodak Mahindra Bank
கோடக் மஹிந்திரா பேங்க் ரூ.2 லட்சம் முதல் காப்பீடு வழங்குகிறது. கோல்டு கார்டுகளுக்கு ரூ.5. முதல் 15 வரையும், பிளாட்டினம் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும் இன்சூரன்ஸ் தருகிறது.
DBS
டிபிஎஸ் இந்தியா வங்கி அனைத்து ஏடிஎம் கார்டு வாடிக்கையாளர்களுக்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை விபத்துக் காப்பீடு வழங்குகிறது.
ATM card insurance
ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்து குறிப்பிட்ட காலத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் இந்த இன்சூரன்ஸ் தொகையைப் பெறலாம். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வங்கியைப் பொறுத்து மாறுபடுகிறது. வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனையும் உண்டு. இந்த இன்சூரன்ஸ் தொகைக்காக சில வங்கிகள் ஆண்டுதோறும் சிறிய தொகையை கட்டணமாகப் பெறுகின்றன.