Asianet News TamilAsianet News Tamil

Kids omicron symptoms:குழந்தைகளை மறைந்திருந்து தாக்கும் ஒமிக்ரான்...இந்த அறிகுறிகள் இருந்த அலட்சியம் வேண்டாம்!

உலகமே கொரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், நம் வீட்டில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியம்.
 

Omicron symptoms for kids
Author
Chennai, First Published Jan 27, 2022, 1:39 PM IST

உலகமே கொரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், நம் வீட்டில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியம். சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், டெல்டா, டெல்டா பிளஸ்,  ஒமிக்ரான் என்று பல்வேறு விதங்களில் உருமாறி, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் மின்னல் வேகத்தில், அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Omicron symptoms for kids

ஒமிக்ரான் மூன்றாம் அலை, குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ஒமிக்ரானின் புதிய அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு 1,692 அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இருப்பினும், ஒமிக்ரான் பாதிப்பு உயிரிழப்புகள், குறைவாக உள்ளது நம்மை  சற்று நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது. 

இந்நிலையில், குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சில அறிகுறிகள் காணப்படும் நிலையில், குழந்தைகளிடம்  நரம்பியல் தொடர்பான அறிகுறிகள் தென்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து,பீடியாட்ரிக் நியூராலஜி இதழில் (Journal Pediatric Neurology) இதழில் வெளிவந்த செய்தியில், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 44 சதவீத குழந்தைகளிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. இதில், கோவிட் நோய்த் தொற்றின் நரம்பியல் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காணப்பட்டதாகவும் ( Neurological Symptoms of covid infection), இந்த குழந்தைகளுக்கு மற்ற நோயாளிகளை விட அதிக கவனிப்பு தேவைப்பட்டதாகவும், கூறப்படுகிறது.  

தற்போது,15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிவிட்டது. ஆனால் இதற்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில், கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உங்கள் குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி சாதாரணமாக வந்து செல்லும். ஆனால், தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தில் இவற்றில் அலட்சியம் வேண்டாம் பெற்றோர்களே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அதேபோன்று, குழந்தைக்கு சளி, வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தாலும், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். 

Omicron symptoms for kids

எனவே,முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, போன்றவற்றை நாமும் கடைபிடிப்பதுடன், குழந்தைகளும் கடைபிடிக்க கற்று கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios