வீட்டு கடன் வாங்கி உள்ளீர்களா..? நல்ல செய்தி உங்களுக்கு தான்....! அக்டோபர் மாதம் முதல் வட்டி குறைவு..! 

ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபபோ ரேட் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்று. கடந்த ரெப்போ விகிதத்தை இந்த ஆண்டில் மட்டும் 110 அடிப்படை புள்ளிகள் குறைத்ததால் இதன் மூலம் பயன்பெறும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியில் இருந்து பெற்றிருக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

அப்படிப்பார்த்தால் தனிநபர் கடன் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கான கடனில் பொது அளவு வட்டி விகிதத்தை பின்பற்ற வேண்டி உள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று ஒரு சில வங்கிகள் கடன்கள் மற்றும் டெபாசிட் கான வட்டி விகிதத்தை ரெப்போ ரேட் உடன் இணைப்பதாக தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் பார்த்தால் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இதன் மூலம் வீட்டுக் கடன் பெற்றவர்கள் செலுத்தும் வட்டி மற்றும் மாதாந்திர தவணை தொகை சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.