தற்போது விளம்பரங்கள் என்றாலே முதலில் தொலைக்காட்சியில் தான் பார்க்கிறோம். அந்த காலத்தில் செய்தித்தாள்கள் மூலமே அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதற்காக விளம்பர யுக்திகளை பயன்படுத்தி வந்தனர். 

 

ஏனென்றால் அப்போதுலாம் தொலைக்காட்சி பெட்டியே செய்தித்தால் விளம்பரங்கள் மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவியது. அந்த வகையில் எந்தெந்த பொருட்கள் செய்திதாளில் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டன என்பது குறித்து சிறு புகைப்பட தொகுப்பு உங்களுக்காக...

 

இதன் விலை அப்போது இவ்வளவு தானா என்று ஆச்சரியப்படுவீர்கள்...!

 

இரண்டு பேர் செல்லக்கூடிய இருசக்கர வாகனம் முதன்முதலில் சென்னையில் வரும்போது அதன் விலை ரூ. 2,875 மட்டுமே.... 

 

 

வீட்டுப்பெண்மணிகள் நேரம் போகவில்லை என்று வீட்டில் சோர்ந்து உட்காந்திருக்கும்போது அவர்களின் தனிமையை போக்கவும் சுய தொழில் கற்றுக்கொள்ளும் நோக்கிலும் கொண்டுவரப்பட்ட தையல் மிஷின் விளம்பரம் இதோ...

தொலைக்காட்சி பெட்டி முதன்முதலில் வந்தபோது செய்தித்தாள் மூலமே விளம்பரம் செய்யப்பட்டது. அதன் பயன்பாடுகளும் செயல்பாடுகளும் எழுத்து வடிவிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. 

இப்போது ரூ. 5 விற்கப்படும் 5 ஸ்டார் சாக்லெட் அப்போது ரூ.1 ரூபாய்தான். 

அப்போதைய பெண்களை வைத்து அழகான முறையில் ஹெ.எம்.டி வாட்ச் விளம்பரம்...

சாதாரணமாக இப்போது ஒரு தோசையின் விலை ரூ. 40, காபியின் விலை ரூ. 15. ஆனால் அப்போது விலை என்னன்னு நீங்களே பாருங்க...

தற்போது பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.71.63 பைசா.  ஆனால் அப்போது, ரூ. 3. 60 பைசா

தற்போது ஃபியாட் கார் குறைந்தது 7 லட்சத்தில் ஆரம்பித்து அதிகபட்சமாக 29 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால் அப்போது அந்த காரின் விலை ரூ. 9 ஆயிரத்து 750 மட்டுமே...

 

தற்போது தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 21 ஆயிரத்து 776 விற்கப்படுகிறது. ஆனால் அப்போது நீங்களே பாருங்கள்...

 

இந்த விலை பட்டியலை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டுவிடாதீர்கள். அப்போதைய காலகட்டத்திற்கு அது மிகப்பெரிய தொகையாக இருக்கலாம்...