இன்றே தொடங்கியது வட கிழக்கு பருவ மழை..! எங்கெல்லாம் நல்ல மழை வரப்போகுது தெரியுமா..?

தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை 17 ஆம் தேதி (நாளை) தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்கூட்டியே இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வட கிழக்கு பருவமழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை மழை பெய்து வருகிறது

தென்மேற்கு பருவமழை நாளை நிறைவு பெறும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதன்படி அடுத்துவரும் 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது

இதன்காரணமாக வரும் 17, 18 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்றவாறு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.