மீண்டும் வருகிறது நோக்கியா (smart phone) ....... உற்சாகத்தில் வெள்ளத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள் ...!!!!

நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சூரி , அடுத்த ஆண்டு 2017 ,பார்சிலோனாவில் நடைபெற உள்ள , மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 இல் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.
மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் வரும் ஆண்டு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 2 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி மொபைல் நிறுவன , தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “ hmd global “ ( nokia ‘ s smart phones , tablets, future mobiles ), நோக்கியாவின் அதிநவீன இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்நிலையில் நோக்கியா Nokia D1C tablet இன் மாதிரி தோற்றம் , தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எது எப்படியோ, நோக்கியாவின் ஸ்மார்ட் போன்ஸ் குறித்த அறவிப்பு, அடுத்த ஆண்டு முதலிலே அறிவிக்க படலாம் என எதிர்பார்கபடுகிறது.
ஆனால், நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சூரி,கலந்து கொள்ளும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில், ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என , நோக்கியா பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.... ஆனால், ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை , நோக்கியா நிறுவனம் சார்பாக தெரிவிக்கவில்லை .
இருப்பினும், மிக விரைவில் நோக்கியாவின் ஸ்மார்ட் போன் வெளியாகும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை..........
