இனி மழை வரும்னு நினைச்சு கூட பார்க்காதீங்க..! வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன..? 

அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கத்தை விட 2019 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையால் இயல்பை விட இரண்டு விழுக்காடு அதிகம் பெய்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில்  வடகிழக்கு பருவமழையால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக நீலகிரியில் 64 சதவீதம் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் வறண்ட  நிலையில் இருக்கும் என்றும், வெயில் சற்று கூடுதலாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.