தமிழக மக்களுக்கு வருத்தமான செய்தி..! வானிலை ஆய்வு மையம் இப்படி சொல்லிடுச்சே..!  

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்திற்கு மழை கிடைக்க வாய்ப்பு குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் விளைவாக வட கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும், இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரபிக் கடல் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த பிறகு தமிழகத்திற்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் அதிக வெப்ப நிலை நிலவி வருகிறது. நேற்றைய தினம் கணக்கீட்டின்படி அதிகபட்சமாக மதுரையில் 102 டிகிரி, நாகப்பட்டினம் கடலூர் உள்ளிட்ட இடங்களில் 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேவேளையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் விழுப்புரம் காஞ்சிபுரம் திருவள்ளூர் புதுச்சேரி கோவை நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.