லுங்கி, நைட்டி அணிந்து வெளியே செல்லத் தடை! நொய்டா குடியிருப்பில் நூதன கட்டுப்பாடு
நொய்டாவில் வீட்டை விட்டு வெளியே வரும்போது லுங்கி, நைட்டி அணிந்து வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்ளில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது லுங்கி, நைட்டி போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த குடியிருப்போர் நல சங்கம் வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியில் உள்ள அந்த நோட்டீஸ் ஜூன் 10ஆம் தேதி அங்கு வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், குடியிருப்பு வளாகத்திற்குள் பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் உடையில் கவனமாக இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, லுங்கிகள் மற்றும் நைட்டிகள் அணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் பை-2 பகுதியில் உள்ள ஹிம்சாகர் சொசைட்டியில் இந்த ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது: கேரள நீதிமன்றம்
"எந்த நேரத்திலும் குடியிருப்பு வளாகத்திற்குள் உங்கள் நடத்தை மற்றும் உடையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நடத்தையை ஆட்சேபிக்க யாருக்கும் வாய்ப்பளிக்கக் கூடாது என உங்கள் அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைவரும் வீட்டு உடைகளான லுங்கி, நைட்டி போன்றவற்றை அணிந்து வெளியே சுற்றித் திரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அந்த நோட்டீஸில் கூறப்படுகிறது.
"இது நல்ல முடிவு, இதை அனைவரும் மதிக்க வேண்டும். இதில் எதிர்க்க எதுவும் இல்லை. பெண்கள் நைட்டி அணிந்து திரிந்தால், அது ஆண்களுக்கு சங்கடமாக இருக்கும். ஆண்கள் லுங்கி அணிந்தால் பெண்களுக்கும் அசௌகரியமாக இருக்கும். ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்" என்று அந்த குடியிருப்பில் வசிப்பவர்களின் நல சங்கத் தலைவர் சி.கே. கல்ரா கூறுகிறார்.
ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய MRF பங்கு மதிப்பு! இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்
இந்த நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வெளியானதும் அதனை எதிர்த்தும் வரவேற்றும் வெவ்வேறு விதமான கருத்துகறை நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். "பொது இடங்களில் நைட்டி, லுங்கி போன்றவை சற்று பொருத்தமற்றவை என்று சொல்வது பழைய சிந்தனையாகக் கருதப்படுகிறது. ஆனால் சில நெறிமுறைகளைப் பின்பற்றதான் வேண்டும்." என்கிறார் ஒருவர்.
இன்னொருவர், "நாம் இப்போது ஒரு வித்தியாசமான சமூகத்தில் வாழ்கிறோம். இப்படி நடப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை" என்று சொல்கிறார். உடுத்தும் உடையிலும் கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டாமா? என்று மற்றொரு நெட்டிசன் கேள்வி எழுப்புகிறார்.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி! சிறிய படகில் 300 பேர் ஏறியதால் விபரீதம்