விழுந்தடிச்சு மன்னிப்பு கேட்ட நிஷா..! என்ன பேசினாலும் சிரிப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டா ஆப்பு இப்படித்தான்..! 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடியாக பேசிப்பேசியே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பல கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதுமாக மிகவும் பிசியாக இருந்து வந்த நிஷாவை அனைவருமே வெகுவாக பாராட்டி வந்தனர். ஆனால் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிஷா, பிரதமர் மோடி.. பாஜக கட்சி.. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என ஒருவரையும் விடாமல் அனைவரையும் கடுமையாக தாக்கி நக்கலாக பேசி உள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி பாஜக மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளம்ப செய்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் பேசிய பேச்சில் ஒரு சிலது  மட்டுமே வெளிவந்துள்ளதாகவும் இன்னும் மற்ற வீடியோக்கள் வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பின்னர் பொதுமக்கள் மத்தியிலும் நிஷாவிற்கு இருந்து வந்த மரியாதை குறைந்து உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் நிஷா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் எந்த ஒரு தவறான நோக்கத்துடனும் தமிழிசை அக்காவை சொல்லவில்லை என தெரிவித்து... தான் பேசியது தவறு என குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரம் கடந்த 3 நாட்களாக சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வருகிறது.