கனடாவில்... 3000 காவல் துறை அதிகாரிகளுக்கும் "ஓர்  தமிழர்" தான் தலைமை..!  ஒட்டு மொத்த தமிழிழர்களுக்கும் பெருமை சேர்த்த மாவீரன்...! 

இலங்கையில் மேயராக பணியாற்றிய ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின், அவருடைய குடும்பமே கனடா நாட்டிற்கு இடம் பெயர்ந்தது. 

இவருடைய பேரனான நிஷாந்த் துரையப்பா தற்போது கனடா நாட்டின் ஒரு மாநிலத்திற்கே  காவல்துறை தலைமை அதிகாரியாக உயர்ந்துள்ளது ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமை கொள்ள செய்துள்ளது. இவருக்கு மூன்று வயது இருக்கும்போது கனடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அங்கேயே தன்னுடைய படிப்பை தொடர்ந்த நிஷாந்த் கடந்த 25 ஆண்டுகளாக காவல்துறையில் அதிகார பதவியில் இருந்து வந்துள்ளார்.

குறிப்பாக போதை தடுப்பு மற்றும் குற்றப் பிரிவுகளில் திறம்பட செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் இதற்கு முன்னதாக ஹாலந்து பிராந்தியத்தில் கூடுதல் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். பின்னர் தற்போது பீல் நகரத்தின் முதன்மை காவல்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பேசும்போது 3 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட பீல் நகரத்தின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றுள்ளதை நினைத்து பெருமையாக உள்ளது. கண்டிப்பாக என் கடமையை திறம்பட செயல்படுத்துவேன். பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் அவர்கள் மீது அதிக நம்பிக்கையும் வைத்துள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

நிஷாந்த் துரையப்பா பணியாற்றய இடங்களில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கனடாவில் இவ்வளவு பெரிய உயரிய பதவியில் இருக்கும் நிஷாந்த் துரையப்பாவை நினைத்து ஒட்டுமொத்த தமிழக  மக்களும் பெருமை அடைய செய்துள்ளது.