நீலபதாகா காயத்ரி மந்திரம், தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் சக்தி கொண்டது. இந்த தேவியை வழிபட்டால், வாழ்வில் செல்வம் செழிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

நீலபதாகா காயத்ரி மந்திரம், தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் சக்தி கொண்டது. இந்த தேவியை வழிபட்டால், வாழ்வில் செல்வம் செழிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகம் கொண்டவள். ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் இருக்கும். இவள் தனது பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி, அபய, வரதம் முத்திரை தரித்தவள். சிவப்புப் பட்டாடை அணிந்திருப்பாள். முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்திருப்பாள்.

இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். தீயவர்களை அழித்து, நல்லவர்களை காக்கும் பேராற்றல் பெற்றவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள், திருவருட் பார்வையால் நொடியில் மேன்மை அடையலாம். இந்த தேவியை வழிபட்டால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேர்வுகளில் முதன்மையாக வரலாம்.

வழிபட வேண்டிய திதிகள்:-

வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை பஞ்சமி.

மந்திரம்:-

ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

ஸ்ரீவித்யை தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் ஓர் அங்கமாக பாவிக்கப்படுகின்றனர்.

காமேஸ்வரி

‘காம’ என்றால், ‘விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள்’ என்று பொருள். இவள் கோடி சூரிய பிரகாசமானவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற அணி கலன்களை அணிந்திருப் பாள். முக்கண், ஆறு திருக் கரங்கள் கொண்டவள். தன் திருக் கரங்களில் கரும்பு வில், மலரம் புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரையுடன் பிறை சூடிய திருமுடியைக் கொண்டவள்.

மந்திரம்:

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச பிரதமை, அமாவாசை.

பலன்கள்: குடும்பத்தில் ஆனந் தம், தனவரவு, மன நிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.

பகமாலினி

இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூரணமான ஐஸ்வரியம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்கியம், வீரியம், முக்தி என்றெல்லாம் பொரு ளுண்டு. முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும், வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள்.

மந்திரம்:

ஓம் பகமாலின்யை வித்மஹே
ஸர்வ வஸங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச துவிதியை, கிருஷ்ண பட்ச சதுர்த்தசி.

பலன்கள்: வாழ்வில் வெற்றி களைக் குவிக்கலாம். கர்ப்பத்தி லுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.