ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலையில் எப்படி மாற்றம் வருகிறதோ.. அதாவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெயிலை போன்று, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், புது புது வைரஸால் மனிதர்களுக்கு  பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கு முன்னதாக, டெங்கு, சிக்கன் குனியா, பன்றிக்காய்ச்சல் என்ற பயம் இருக்கும். இந்த நிலையில் மீண்டும் புது தலை வலியை கொடுக்க வந்துள்ளது அபார வைரஸ்.

வெஸ்ட் நைல் வைரஸ் என்ற இந்த வைரஸ் அமெரிக்காவில் பரவி வந்தது. இந்த வைரஸ் கொசு கடி மூலம் பரவ கூடியது. தற்போது இந்த வைரசுக்கு கேரளாவை சேர்ந்த 7 வயது சிறுவன் பாதிக்கப்பட்டு உள்ளான். இந்த சிறுவனுக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு ஆணையத்தில் இருந்து 4 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்பி உள்ளது.

இந்த வைரசால் பாதிப்புக்குளாகவும் போது, குமட்டல், வாந்தி, தலைவலி,வீக்கம், தோல் அரிப்பு,காய்ச்சல், நிணநீர் சுரபிக்குகள் வீக்கம்  ஏற்படும். இந்த வைரஸ் மற்றவர்களையும் தாக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.