Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவை நோக்கி வரும் பேராபத்து... 18 மாநிலங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு..!

இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

New type of corona virus detected in 18 states
Author
Delhi, First Published Mar 24, 2021, 5:40 PM IST

இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கம் வரை கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது, அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப், கேரளா, குஜராத், டெல்லி என பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

New type of corona virus detected in 18 states

இது கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்திற்கு பின்னர் மிக உயர்ந்த ஒற்றை நாள் உயர்வு ஆகும், இதன் மூலம் நாடு தழுவிய அளவில் கொரோனா பாதிப்பு 1.17 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா வைரஸ்களால் 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

New type of corona virus detected in 18 states
 
இந்நிலையில், மீண்டும் மரபணு மாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மரபணு மாறிய புதிய கொரோனாவை 'Double Mutant Variant' என வகைப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய வகையான கொரோனா குறித்தான ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios