புதுச்சேரியிலிருந்து விஜயவாடா வழியாக டெல்லிக்கு தினசரி விமான சேவை தொடங்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

அதன் படி, புதுச்சேரியிலிருந்து விஜயவாடா வழியாக டெல்லிக்கு, புதிதாக தினசரி விமான சேவை இயக்கப்பட திட்டமிடப்பட்டு  உள்ளது. இந்த சேவையை சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏர் ஷபா விமான நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிறுவனம் தனது அடுத்த கட்ட சேவையாக தினமும் 
புதுச்சேரியிலிருந்து, விஜயாவாடா வழியாக டெல்லிக்கு விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது.


 
இந்த சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது தீபாவளிக்கு முன்னதாகவே இந்த சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என புதுவை விமான நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.