உருவானது அதிகாரபூர்வ "புது மொழி கிளிகி"! 2 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் "மதன் கார்க்கி" அசத்தல்..! 

உலக தாய்மொழி தினமாக இன்று அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் கிளிகி மொழி என்ற புதிய மொழியை இந்த உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி

தன்னுடைய கல்லூரி காலம் முதலே புதிய ஓர் மொழியை உருவாக்கவேண்டும் என முயற்சியில் இறங்கிய கார்க்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில், இந்த ஒரு விஷயத்தை உட்புகுத்தி இருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற காளகேயர்கள் என்ற கூட்டம் போருக்கு தயாராகி வரும் குழுவாக இடம்பெறும்.  அந்த படத்தில் இவர்கள்  பேசிய மொழி கிளிகி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மொழிக்கு சொந்தக்காரர் மதன்கார்க்கி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவத்தில் மட்டும் இருந்த மொழிக்கு தற்போது வடிவம் கொடுக்கும் பொருட்டு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை துவக்கி இருந்தார். அதன்படி தற்போது உலக தாய்மொழி தினம் இன்று கிளிகி மொழிக்கு எழுத்து வடிவமும், அதற்கெனவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமும் இன்று அறிமுகம் செய்துள்ளார். இதனை பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மதன்கார்க்கி தெரிவிக்கும்போது வெறும் இரண்டு நிமிடத்தில் கிளிகி மொழியில் இடம்பெற்றுள்ள எண்களை கற்றுக் கொள்ளலாம் என்றும், இரண்டு மணி நேரத்தில் மொத்த மொழியினையும் புரிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

காரணம் இதற்கான வடிவமைக்கப்பட்ட இலக்கணம் மிக எளிது எனவும் குறிப்பிட்டுள்ள, அவர் இதற்கு முன்னதாக அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்னதாக உலகம் முழுவதுமே 7000 மொழிகள் இருந்ததாகவும், தற்போது 3 ஆயிரம் மொழிகள் மட்டுமே இருக்கிறது என சொல்லப்படுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

இந்த ஒரு நிலையில் புதிய ஓர் மொழியை அறிமுகம் செய்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இது குறித்த கருத்துக்களை மக்கள் பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மதன்கார்க்கி.