கொரோனா பாதித்தவர்களுக்கு அதிர்ச்சி... இந்தியாவில் அறிவிக்கப்பட்ட கருப்பு பூஞ்சை தொற்று..!

இந்தியாவில் முதல் முறையாக, கறுப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக ஹரியாணா மாநில அரசு  பட்டியலிட்டுள்ளது.

New epidemic announced in India in the wake of the Corona atrocity ... shock ..!

இந்தியாவில் முதல் முறையாக, கறுப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக ஹரியாணா மாநில அரசு  பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், ‘’கடந்த சில நாட்களில் மட்டும் மாநிலத்தில் 40 பேருக்கு 'மியூகோர்மைகோசிஸ்' என்ற அழைக்கப்படுகிற கறுப்பு பூஞ்சை நோய் தொற்று தாக்கியுள்ளது. இதையடுத்து கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிடப்படுகிறது. இனி மருத்துவர்கள் பொதுமக்கள் யாரேனும் இத்தொற்றுடன் வருவார்களேயானால் சி.எம்.ஓ.,க்களிடம் தெரிவிப்பார்கள். இதன்மூலம் நோய்த் தொற்றின் மூலம் குறித்து கண்டறியலாம்; பரவல் ஏற்பட்டால் அதை சமாளிக்க முடியும்.

New epidemic announced in India in the wake of the Corona atrocity ... shock ..!

மாநிலத்தில் உள்ள மருத்துவர்களுடன் ரோத்தக் சீனியர் மருத்துவர்கள் சங்கம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி விருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கறுப்பு பூஞ்சை நோய் தொற்று குறித்தும் கொரோனா நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.New epidemic announced in India in the wake of the Corona atrocity ... shock ..!

எந்த ஒரு நோயையாவது ஓர் அரசு அறிவிக்கப்பட்ட நோய் என பட்டியலிடுகிறது என்றால், அந்த நோய் குறித்தத் தகவல்களை அனைத்து அரசு, தனியார் மருத்துவர்களும் மருத்துவத் துறையின் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. கொரோனாவிலிருந்து குணமடையும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கறுப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்துவற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios