ஒரு செல்ஃபி போதும்.. உடனே மருத்துவர்கள் வீடு தேடி வருவார்கள்..! தமிழக அரசு அடுத்த அதிரடி நடவடிக்கை ..! 

தமிழகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் மிக வேகமாக பரவும் மாநிலமாக தமிழக அரசு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே காய்ச்சல், இருமல் என கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

அதன் படி 

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவசர கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் பரிமாற்றத்திற்காக ‘கொரோனா மானிட்டரிங்’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு  உள்ளது 

https://play.google.com/store/apps/details?id=com.gcc.smartcity

மேலும் இந்த செயலியை‘ஆப்பிள்’ செல்போனை தவிர்த்து அனைத்து வகையான ‘ஆண்ட்ராய்டு’ செல்போனிலும் பதிவிறக்கம் செய்யலாம். தற்போது சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் குறித்து கேட்டறியவும், தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்களா என்பதனை உறுதி செய்வதற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.