வீடு தேடி வரும் அழகு நிலையம் ....”URBAN CLAP APP “

எதிலும் சுலபம் எல்லாம் சுலபம் என , இனி வரும் காலங்களில் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. சொல்லப்போனால் , மனிதனின் உடல் உழைப்பு குறைந்து, மூளைக்கு மட்டுமே அதிக வேலை உண்டு.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் முதல் அனைத்தும் வீடு தேடி வர , ஆன்லைன் வர்த்தகம் தொடங்கி , புது புது செயலிகள் வரை மக்களின் பயன்பாட்டிற்கு ரொம்ப உதவியாக இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது பெண்கள் வீட்டிலேயே தங்களை அழகு படுத்திக்கொள்ளும் விதமாக, வீட்டிற்கே வந்து, தங்களது சேவையை வழங்குகிறது urban clap app .

இந்த ஆப் மூலம் நமக்கு வேண்டிய சேவையை புக் செய்துக்கொள்ளலாம் .அவர்கள் வீட்டிற்கே வந்து பெடிக்யூர், மெனிக்யூர் என ஆரம்பித்து அனைத்து விதமான சேவையையும் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர சேவைகள் :

இந்த ஆப் மூலம் அழகு சார்ந்த சேவை மட்டுமின்றி, நம் வீட்டுப்பொருட்கள் பழுதடைந்தால், பழுது பார்ப்பவர்கள் முதல் வீட்டிற்கே வந்து பாடம் எடுக்க ஆசிரியர்கள் வரை , நமக்கு என்ன தேவையோ அதனை இந்த ஆப் மூலம் பெறலாம் என்பது குறிபிடத்தக்கது.