உப்பை அடுப்பு பக்கத்தில் வைக்காதீங்க... காரணம் தெரிஞ்சா இனிமேல் வைக்க மாட்டீங்க..!!
உப்பை அடுப்பு பக்கத்தில் வைக்க கூடாது. அது ஏன் என்று தெரியுமா? காரணம் இங்கே..

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களிலும் அறிவியல் கலந்து இருக்கிறது சொல்லப்போனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டத்தில் கூட ஒவ்வொன்றையும் தெளிவாக புரிய வைத்துள்ளனர் நமக்கு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நம் முன்னோர்கள் சொன்ன அறிவியல் சார்ந்த விஷயங்களை நாம் அற்பமாக எண்ணி அவற்றை பின்பற்றுவதில்லை அல்லது மறந்து விடுகிறோம். அதன்படி உப்பை அடுப்பு பக்கத்தில் வைக்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..
உப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். நம்மைப் பொறுத்தவரை இது வெறும் உப்பு தான், ஆனால் இதில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின் இருக்கிறது தெரியுமா? நம் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்று அயோடின் ஆகும். உடலில் அயோடின் சரியான அளவு இல்லாததால் தான் தைராய்டு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. பொதுவாகவே "தைராக்ஸின்" என்ற ஹார்மோன் மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்க இது உதவுகிறது. அந்த வகையில் அயோடின் தான் இந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட பெரிதும் உதவுவது. இப்படி முக்கியமாக விளங்கும் அயோடின் உப்பில் தான் இருக்கிறது.
இதையும் படிங்க: உப்பில் மறைந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து.. வேகமாக அதிகரிக்கும் நோய் பாதிப்பு.. ஷாக் தகவல்
உப்பை ஏன் அடுப்பு பக்கத்தி வைக்க கூடாது?
உப்பை கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் உப்பில் இருக்கும் அயோடின் உலோக பாத்திரங்களுடன் தாக்கம் புரியும். எனவேதான் இவற்றை கண்ணாடி பாத்திரத்தில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அது போல் உப்பை ஒளி உட்புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளியின் தாக்கத்தால் அயோடின் அழிந்துவிடும். அதுபோல் உப்பு டப்பாவை அடுப்புக்கு அருகில் வைக்க கூடாது என்பதற்கான காரணமும் இதுவாகும். உப்பில் இருக்கும் அயோடின் அழிந்த பின் அவற்றை உணவில் சேர்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D