ரூ.37,000 கோடி நிறுவனத்தை நடத்தும் குடும்பம்.. முகேஷ் அம்பானியின் சகோதரி மகள் பற்றி தெரியுமா?
முகேஷ் அம்பானியின் அதிகம் அறியப்படாத உறவினர்களில் ஒருவர் நீனா கோத்தாரியின் மகள் நயன்தாரா கோத்தாரி
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பம் அம்பானி குடும்பம் என்று அனைவருக்கும் தெரியும். தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறைகள் மற்றும் பிரம்மாண்ட சொத்துக்களுக்காக அம்பானி குடும்பத்தினர் அவ்வப்போது செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் ஆக்கிரமித்து வருகின்றன. அம்பானி மனைவி நீதா அம்பானி, அவர்களின் பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி பற்றியும் அவ்வப்போது செய்திகள் வலம் வருகின்றன.
ஆனால் அம்பானி குடும்பத்தில் இன்னும் சில உறுப்பினர்கள் ஊடக வெளிச்சத்தை விட்டு விலகி தனிப்பட்ட வாழ்க்கையை நடத்துகிறார்கள். முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். ஒருவர் நீனா கோத்தாரி , இன்னொருவர் தீப்தி சல்கோகர் இருவரும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருக்கின்றனர்.
அடேங்கப்பா முகேஷ் அம்பானி குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இத்தனை கோடி ரூபாய் சொத்தா?
அந்த வகையில் முகேஷ் அம்பானியின் அதிகம் அறியப்படாத உறவினர்களில் ஒருவர் நீனா கோத்தாரியின் மகள் நயன்தாரா கோத்தாரி. நீனா கோத்தாரி 1986 இல் பத்ரஷ்யம் கோத்தாரியை மணந்தார், இந்த தம்பதிக்கு அர்ஜுன் கோத்தாரி என்ற மகளும், நயன்தாரா கோத்தாரி என்ற மகளும் உள்ளனர்.
நயன்தாரா அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தனது ப்ரீ வெட்டிங் நிகழ்வின் புகைப்படங்கள் 2013 இல் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் நயன்தாரா கோத்தாரி பிரபலமடைந்தார், ஊடக அதிபரும் தொழிலதிபருமான ஷமித் பார்டியாவை நயன்தாரா கோத்தாரி மணந்தார், இவர் ஷியாம் சுந்தர் மற்றும் ஷோபனா பார்டியா ஆகியோரின் மகன் ஆவார்.
நொய்டாவில் நிறுவப்பட்ட ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ், டோமினோஸ் மற்றும் டன்கின் டோனட்ஸ் போன்ற சின்னச் சின்ன பிராண்டுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.37000 கோடிக்கு மேல் உள்ளது.
ஷமித் பார்டியா ஹிந்துஸ்தான் மீடியா வென்ச்சர்ஸின் முன்னாள் இயக்குநராகவும், ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாகமற்ற இயக்குநராகவும் உள்ளார். நயன்தாரா கோத்தாரியின் மாமியார் ஷோபனா பார்டியா ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தை நடத்துகிறார்.
Adani-Ambani: இரு துருவங்கள்.. கைகோர்த்த அம்பானி மற்றும் அதானி.. எதற்கு தெரியுமா?
தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, நயன்தாராவின் தாய் நீனா குடும்பத் தொழிலான கோத்தாரி சுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை கவனித்து வருகிறார். நயன்தாரா கோத்தாரிக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் முக்கிய பங்குகள் உள்ளன. எனினும் அதன் மதிப்பு எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.