Belly fat reduce: கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகள் நிச்சயம் உங்கள் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்.
இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், தொப்பை மற்றும் தொந்தி இரண்டுமே சிறுசு முதல் பெரியவர் வரை உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் பாடாய் படுத்துகிறது. அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும்.

தொப்பைக்கு முக்கியக் காரணமாக, நாம் சாப்பிடும் உணவுப் பழக்கம் இருக்கிறது. மேலும், மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டை அதிகம் உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை காரணமாக இருக்கலாம். உண்மையில், தொப்பை கொழுப்பு மிகவும் ஆபத்தான கொழுப்பு. இது உங்கள் தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், பல வித நோய்களும் வளர அனுமதிக்கிறது. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகள் நிச்சயம் உங்கள் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

தயிர்:
தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.இதை பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்.
கிரீன் டீ:
தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதில் கிரீன் டீ குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும், தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்.
இவற்றை தவிர்த்து கீழே சொன்ன பானங்களையும் பருகினால் உடனே வித்தியாசம் தெரியும்..
பெருஞ்சீரகம் தண்ணீர்:
பெருஞ்சீரகம் வீக்கம் மற்றும் அஜீரணத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பாரம்பரிய தீர்வாகும். பெருஞ்சீரகம் விதைகளில் டையூரிடிக் பண்புகள் உள்ளன, அவை உடலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.
ஓமம் தண்ணீர்:
இரண்டு ஸ்பூன் வறுத்த ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். கலவையை வடிகட்டி குடிக்கவும். இவை உங்கள் தொப்பையை குறைக்க உதவுகிறது.மேலும், ஓமம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

எலுமிச்சை பானம்:
எலுமிச்சை பானம், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பெக்டின் ஃபைபர் தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கூடுதல் கிலோவை குறைக்கலாம்.
உடலில் சேரும் கொழுப்பை கரைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே, மேற் சொன்னவற்றை பின்பற்றுவதுதான் உங்களுடைய வாழ்கை முறையில் மாற்றத்தை கொண்டு வருவது அவசியம்.
