Asianet News TamilAsianet News Tamil

National Science Day 2022: இன்று தேசிய அறிவியல் தினம்....‘ராமன் விளைவு’ பற்றி தெரிந்து கொள்வோம்..

National Science Day 2022: மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

National Science Day 2022
Author
Chennai, First Published Feb 28, 2022, 10:59 AM IST

மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப் 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

National Science Day 2022

சி.வி.ராமன் 'ராமன் விளைவு’  கண்டுபிடிப்பு:

தமிழ்நாட்டில் நவம்பர் 7,1888 ஆம் ஆண்டில் பிறந்த சி.வி.ராமன் (C.V. Raman ). இவர் இயற்பியல் துறையில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.  இவர் பிப்ரவரி 28,1928ல் ராமன் விளைவு என்னும் அறிவியல் கூற்றை கண்டுபிடித்தார்.  அவரது ராமன் விளைவுக்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.தன் பிறகு சி.வி.ராமன் அவர்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதினை 1954 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது.

ராமன் விளைவு நினைவாக பிப்ரவரி 28 ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்தியா அரசு 1987 ஆம் ஆண்டில் அறிவித்தது. இந்த தேசிய அறிவியல் தினத்தில் அறிவியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் விதமாக தேசிய அறிவியல் தினத்தன்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 

பல அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் புது கண்டுப்பிடிப்புகளை தேசிய அறிவியல் தினத்தில் நடக்கும் கண்காட்சியில் விவரிப்பார்கள். 

ராமன் விளைவு என்றால் என்ன?

ராமன் விளைவு ஒளியின் அலைநீளத்தில்(wavelength) ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. அதாவது ஒளிக்கற்றை ஒரு தூசியற்ற சாதனத்திற்குள் நுழைந்தால் அதன் ஒளிக்கற்றிலிருந்து சிறிய அளவிலான ஒளிசிதறல்கள் ஏற்படும். இந்த சிறிய ஒளிசிதறல்களின் அலைநீளம் உள்ளே அனுப்பப்பட்ட ஒளியின் அலைநீளத்தில் இருந்து சற்று மாறுபடும். இந்த மாற்றத்தை தான் ராமன் விளைவாக சி.வி.ராமன் கண்டுபிடித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios