NSRDA Scheme : தபால் நிலையத்தில் பல சேமிப்பு திட்டங்களை அரசு வழங்கி வருகின்றது, அதில் இந்த NSRDAS எனப்படும், தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு திட்டம் மூலம் அதிக லாபம் பெறலாம்.
தபால் நிலையங்களை பொறுத்தவரை "தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு" என்பது பல ஆண்டுகளாக அமலில் இருந்து வரும் ஒரு சேமிப்பு திட்டமாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 6.7 சதவிகித வட்டி கிடைக்கின்றது. இதில் கூடுதல் சிறப்பாக கூட்டு வட்டி முறை கணக்கிடப்படுவதால் இந்த திட்டமானது முதலீட்டாளர்களுக்கு சிறந்ததொரு லாபத்தை அளிக்கின்றது.
இந்த திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து உங்கள் முதலீட்டை தொடங்கலாம். இதற்கு அதிகபட்சமான தொகை என்ற ஒரு வரையறை கிடையாது. தனிநபராகவோ அல்லது மூன்று பேர் கொண்ட குழுவாகவோ இதை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற தபால் நிலையத்தில் சேமிக்க துவங்கலாம்.
லாக் இன் காலம் என்ன?
இந்த திட்டத்தில் சேர்பவர்கள் குறைந்தபட்சம் 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) இந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை சேமிக்க வேண்டும்.
குறைந்தபட்ச தொகை என்ன?
மாதம்தோறும் 100 ரூபாய் முதல் நீங்கள் சேமிக்க துவங்கலாம், மேலும் இதற்கு அதிகபட்ச தொகை என்ற அளவுகோல் இல்லை.
யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம்?
இந்த திட்டத்தில் ஒருவாறு முதல் 3 பேர் வரை இணைந்து பணத்தை சேமிக்கலாம், சிறார்களை பொறுத்தவரை அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் சேமிக்கலாம்.
அட்வான்ஸ் டெபாசிட்
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் இது தான், அதாவது நீங்கள் 5 வருடங்களுக்கு சேர்க்க நினைக்கும் பணத்தினை உங்களிடம் அதில பணம் இருக்கும்போது ஒரே தவணையில் அட்வான்ஸ் முறையில் செலுத்தலாம்.
லோன் வசதி
இந்த திட்டத்தில் சேர்ந்து 12 தவணையை கட்டுபவர்களுக்கு, லோன் பெரும் வசதிகளும் அனுமதிக்கப்படுகிறது.
உதாரணமாக நீங்கள் மாதம் 10,000 முதலீடு செய்கின்றீர்கள் என்றால் 5 வருடத்தில் 6 லட்சம் ரூபாய் சேமிப்பீர்கள். 5 ஆண்டுகள் முடிவில் நீங்கள் இந்த பணத்தை மீண்டும் எடுக்கும்போது 6.7 சதவிகித வட்டி கிடைக்கும்போது உங்களுக்கு வட்டியாக மட்டும் 1,13,659 ரூபாய் கிடைக்கும். நீங்கள் சேமித்த பணத்தையும் சேர்ந்து உங்களுக்கு மொத்தம் 7,13,659 ரூபாய் கிடைக்கும்.
