கோடி நன்மை புரியும் "நாமக்கல் ஆஞ்சநேயர்"..!  முதல் முறையாக..1 லட்சத்து 8 வெற்றிலை அலங்காரம்..! குவியும் பக்தர்கள்..! 

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சி நேயர் ஆலயத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஒரேகல்லால் ஆன ஆஞ்சிநேயருக்கு இன்று முதல் முறையாக 1 லட்சத்து 8 வெற்றிலை சாற்றி வழிபாடு செய்தனர்

இந்த கோவிலில் நரசிம்மர்-அரங்கநாதர் சுவாமிகளை கை கூப்பி நின்று வணங்கிய படி உள்ள ஆஞ்சநேயருக்கு இன்று ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு  சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. 

அதன் பின், ஒரு லட்சத்தி எட்டு வெற்றிலை அலங்காரம் (100008) செய்ய பட்டு சிறப்பு அர்ச்சனையும் மஹா தீபம் ஏற்றப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முதன் முறையாக இந்த 100008 வெற்றிலை அலங்காரம் சாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிலை அலங்காரத்தில் 25 கிலோ ரோஜா, சம்மங்கி பூ பயன்படுத்தப்பட்டு ஆஞ்சநேயர்  அலங்காரம் செய்யப்பட்டது. 

வெற்றிலை அலங்கார ஆஞ்சநேயரை வணங்குவதால் நன்மைகள்

ஜெயம் உண்டாகும், கல்வி மேன்மை அடையும், நோயற்ற வாழ்வு பெறவும், மகாலட்சுமி அருள் கிடைக்கும், திருமண தடை நீங்கும், பயம் நீங்கும் என்பதே இதன் சிறப்புயாகும். இத்தகைய  சிறப்பு வாய்ந்த நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட பல்லாயிர கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.