நான் உயிரோடு தான் இருக்கேனான்னு என் குடுமத்துக்கு தெரியாது..! ராணுவ வீரரின் கதறல்..! பறிபோன 3 நாள் நிம்மதி..! 

நான் உயிரோடு இருப்பதே மூன்று நாட்களுக்கு பிறகு தான் என்னுடைய குடும்பத்தினருக்கு தெரியும் என சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கடந்த 14ம் தேதி புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடந்ததை நேரில் பார்த்த சில வீரர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அதில் ஜஸ்விந்தர் பால் என்ற வீரர் ஒருவர், "இந்த கொடூர தாக்குதலை என் கண்முன்னால் பார்த்தேன் என்னால் மறக்கவே முடியாது...

தாக்குதல் நடத்தப்பட்ட பேருந்துக்கு பின்னால் நாங்களும் சென்று கொண்டிருந்தோம். தாக்குதல் நடந்த பின்பு கீழே இறங்கி பார்த்தபோதுதான் சக வீரர்களின் உடல்கள் கண்முன்னே சிதைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எங்களுக்கு வார்த்தையே வரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வீரர் பேசும்போது இந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு சில வீரர்களுக்கு நாங்களே முடிந்த அளவிற்கு முதலுதவி செய்தோம். இந்த தாக்குதலுக்கு பின் மூன்று நாட்களாக என் குடும்பத்தினர், எனக்கு என்ன ஆனது என கூட தெரியாமல் மிகவும் வருத்தமடைந்தனர், பின்னர்தான் என் நண்பன் மூலம் நான் உயிரோடு உள்ளேன் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது என பேட்டி கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது