பாய் வீட்டு நெய் சோறு.. குக்கரில் இப்படி செய்ங்க.. குழையாமல் வரும்..!

Ghee Rice Recipe : இந்த கட்டுரையில் பாய் வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

muslim style ghee rice recipe in tamil mks

இன்று மதியம் ஏதாவது வெரைட்டி ரைஸ் சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் நல்ல மணமாகவும், சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், அப்படியே பிரியாணி சாப்பிட்டது போல
இருக்க வேண்டுமா? அப்படியானால் பாய் வீட்டு ரெசிபியை ஒன்றை ட்ரை பண்ணி பாருங்கள்.

பொதுவாகவே, பாய் வீடுகளில் செய்யப்படும் பிரியாணிக்கு மவுசு அதிகம் என்றே சொல்லலாம். அதே அளவுக்கு நெய் சாதத்திற்கும் உண்டு. பலரும் பாய் வீட்டு நெய் சாதத்தை விரும்புவார்கள். குறிப்பாக, இந்த சாதத்திற்கு சிக்கன் அல்லது மட்டன் கிரேவி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக,  இந்த ரெசிபி செய்வதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். ஸ்கூல், கல்லூரி, அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு டிபன் பாக்ஸில் இந்த நெய் சாதம் அடைத்துக் கொடுத்தால், அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க... இப்போது இந்த கட்டுரையில் பாய் வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  வீடே மணக்கும் ருசியான பாய் வீட்டு குஸ்கா.. ரெசிபி இதோ!

பாய் வீட்டு நெய் சாதம் செய்ய தேவையான பொருட்கள் : 

பாஸ்மதி அரிசி - 2 கப்
நெய் - 5 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 7
ஏலக்காய் - 3
பட்டை - 2
கிராம்பு - 6
அன்னாசிப்பூ - 2
பிரியாணி இலை - 2
புதினா இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  பாய் வீட்டு மட்டன் பிரியாணி ஒருமுறை இப்படி செய்ங்க.. திரும்பத் திரும்ப சாப்பிடுவீங்க!

செய்முறை :

பாய் வீட்டு நெய் சாதம் செய்ய முதலில்,   எடுத்து வைத்த அரிசியை நன்கு கழுவி சுமார் 1 மணி நேரம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் அதில் முந்திரி பருப்பு போட்டு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து அதில், கழுவி வைத்த பாசுமதி அரிசியை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் 2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். பின் இதில் பொடியாக நறுக்கிய புதினா இலையை சேர்த்துக் கொண்டு, கிளறிவிடுங்கள். அதன் பிறகு குக்கரை மூடி, சுமார் 3 விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனதும், குக்கரின் மூடியை திறந்து ஒருமுறை கிளறிவிடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான பாய் வீட்டு நெய் சாதம் ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios