ஆகாஷ் அம்பானியின் மனைவியும், அம்பானியின் மூத்த மருமகளுமான ஷ்லோகா மேத்தாவின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 

பல ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களுக்குப் பிறகு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரம்மாண்ட திருமணம் கடந்த 12-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா என ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

அதே போல் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, அமெரிக்க பிரபலங்கள் கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் என பல சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதே போல் ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, அட்லீ, ப்ரியா.நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராம் சரண், மகேஷ் பாபு என பல் தென்னிந்திய பிரபலங்களும் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

அம்பானி வீட்டு திருமணம் தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆகாஷ் அம்பானியின் மனைவியும், அம்பானியின் மூத்த மருமகளுமான ஷ்லோகா மேத்தாவின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 

அந்த வீடியோ கிளிப்பில், கணவர் ஆகாஷ் அம்பானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் அமர்ந்து ஸ்லோகா தூங்குவதை பார்க்க முடிகிறது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் சுப ஆசிர்வாத விழாவின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Scroll to load tweet…

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் சோர்வாக இருந்ததால் ஷ்லோகா அம்பானி தூங்கி இருக்கலாம் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு பயனர் “ எனது சொந்த திருமணத்தில் எனக்கு தூக்கம் வந்தது, காலையில் இருந்து உணவு இல்லை, முந்தைய நாள் இரவு தூக்கம் இல்லை, இந்திய திருமணங்கள் தம்பதிகளுக்கு மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தினருக்கும் சோர்வாக தான் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். 

Scroll to load tweet…

மற்றொரு பயனர் “வீட்டில் ஒரு திருமணம் நடக்கும் போது அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஓய்வின்றி உழைக்கிறார்கள். இவ்வளவு காலம் நீடிக்கும் திருமண விழாக்களில் கண்டிப்பாக அனைவரும் சோர்வடைவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் திருமணம் ஜூலை 12 அன்று கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 13 அன்று சுப ஆசீர்வாத விழாவும், ஜூலை 14 அன்று மங்கள் உத்சவ் என்ற திருமண வரவேற்பும் நடைபெற்றது. ஜூலை 15 அன்று, திருமணத்திற்குப் பிந்தைய மற்றொரு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.