துப்புரவாளர்  பணியில் சேர்ந்த Msc மாணவி..! என்ன காரணம் சொல்கிறார் பாருங்கள்..! 

சமீபத்தில் கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த வேலையில் சேர்வதற்கு பட்டதாரிகளும் விண்ணப்பித்து இருந்தனர்.

அதாவது பிகாம், பிஏ, பிஎஸ்சி படித்த பட்டதாரிகள் உள்பட 7300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் 5200 பேர் பங்குபெற்றனர். அவர்களது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 321 பேருக்கு பணி நியமன ஆணை இன்று கோவையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த 23 வயதான மோனிகா என்ற இளம்பெண் துப்புரவுப் பணியாளருக்கான ஆணையை அமைச்சரிடம் இருந்து பெற்றார். இவர் எம்எஸ்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது, "மாநகராட்சியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக எனக்கு தெரிய வந்தது. அதனால் விண்ணப்பித்து இருந்தேன். நான் எம்எஸ்சி படித்துக்கொண்டு இருக்கிறேன்.பதித்தவள் என்பதற்காக இந்த வேலை செய்யமாட்டேன் என்பதெல்லாம் கிடையாது. எனவே துப்புரவு பணி செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மாணவியின் சொல் செயல் அனைத்தும் அனைவராலும் பாராட்டும்படி உள்ளதால், இவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்